இன்றோடு ஓராண்டாகிறது.. புதிய தலைமுறையில் சேர்ந்து...
பள்ளியிலும்... கல்லூரியிலும் அறிவியலை தேர்வு செய்து படித்த எனக்கு அப்போதெல்லாம் தெரியாது நான் முழு நேர ஊடகவியலாளனாக மாறுவேன் என்று.... எனது வாழ்வை வடிவமைத்ததில் எனது அப்பாவின் பங்கு அதிகம்... நாளிதழ், வார இதழ்களை வீட்டிற்கு வாங்கி வந்து பாடப் புத்தகங்களோடு அவற்றையும் வாசிக்க தூண்டியவர்..
நான் எட்டாவது படிக்கும் போது எனது கிராமத்தில் பாதியில் விட்டுபோன சாலை பணிகளை பற்றி " ஓட்டை டவுசருக்கு ஒட்டு " என்ற தலைப்பில் ஒரு செய்தியாக (?!) எழுதி தினமலர் நாளிதழுக்கு அனுப்பினேன்... அது இரண்டு தினங்களில் பிரசுரமும் ஆனது.. அப்போது எங்கள் கிராமத்தில் "கிராம உதவியாளராக" (வருவாய் துறை ) வேலை செய்துவந்த எனது அப்பாவிடம் ஊராட்சி மன்ற தலைவர் "கோர்த்து" விட அன்று எனக்கு சரியான "கச்சேரி " .
அன்று வாங்கிய அடி வலித்தாலும் பத்தாவது படிக்கும் போது சிறுவர்மலரில் எனது சிறுகதைகள் பிரசுரமாக அதுவே அடித்தளமாக அமைந்தது.. ஆனால் அப்போது வரை நான் என்னாவாகப் போகிறேன் என்ற கேள்விக்கு விடை தெரியாமலிருக்க "விண்வெளி அறிவியல் " தான் இனி என் வாழ்க்கை என்று முடிவெடுத்து, கல்லூரியில் இயற்பியல் பாடத்தை தேர்வு செய்து படித்தேன்.
அதற்கும் காரணம் எனது அப்பா.. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது எனக்கு 5 வயதிருக்கலாம்...மின்சார வசதியில்லாத ஓட்டு வீடு... கயிற்று கட்டிலில் என் அப்பாவுடன் வானத்தை பார்த்து படுத்திருக்கும் போது அவர் சொன்ன நட்சத்திர கதைகளும்.. நிலா ஏன் பூமியை சுற்றுகிறது என்று அவர் சொன்ன விளக்கமும்தான்....
எந்த பொருளாதார பின்னணியும் இல்லாத சூழலில் என்னையும் எனது அண்ணனையும். படிக்க வைத்த அவருக்கு பாரமாக இருக்க வேண்டாம் என்று 2006 இல் திண்டுக்கல்லில் இயங்கிவந்த உள்ளூர் தொலைக்காட்சியில் வேலைக்கு சேர்ந்தேன்... அன்று தொடங்கிய இந்த ஊடகப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று புதிய தலைமுறையில் செய்தியாளராக வேலை செய்து வருகிறேன்.. இங்கு வந்தபிறகு நான் எட்டிய மகிழ்சிகரமான நாட்கள் நிறைய.. குறிப்பாக ஶ்ரீஹரிகோட்டா இந்திய விண்வெளி ஆய்வு மைய பயணம்... இயற்பியல் படித்த நான் ஒரு விஞ்ஞானியாக (? :P) உள்ளே செல்ல நினைத்து ஒரு செய்தியாளனாக சென்றது... பலகட்ட பாதுகாப்பு அமைப்பு கொண்ட ராக்கெட் ஏவுதளம், ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு அறை ஆகிய இடங்களுக்குச் சென்றது.. இதுவரை 5 முறை அங்கு சென்றுவிட்டேன்.... பிறவிப்பயனையே அடைந்தவிட்டதைப் போன்ற மகிழ்ச்சி.. அதை என்னால் எழுத்துக்களால் விளக்க முடியவில்லை. அதேபோல், குழந்தைகளுக்கான தடுப்பு மருந்து ஒன்று காலாவதியாகியும் விற்பனையானதை அம்பலப்படுத்தியதை அடுத்து நாடு முழுவதும் அந்த மருந்திற்கு இடைக்கால தடைவிதித்தது மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம். இவையெல்லாம் எனக்கு மனதில் ஆழமான திருப்தியை ஒரு பக்கம் கொடுத்தாலும் எட்ட வேண்டிய தூரம் இன்னும் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது எனது பேனா...
என் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட என் பெற்றோர் ,குருநாதர் "தினமலர் " ஹரிஹரன், மற்றும் என் வாழ்வோடு பிணைந்த அனைத்து தோழமைகளுக்கும்.. ஊடக நண்பர்களுக்கும்.. நன்றி...
எனது கனவுகளின் பயணம் தொடரும்....